மருத்துவ சேவையாளர்கள், தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மருத்துவ சேவையாளர்கள், தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

மருத்துவ சேவையாளர்கள், தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (05) காலை முதல் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. 

 மன்னார் பொது வைத்தியசாலையிலும் நேற்று காலை 8 மணி முதல் 4 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று காலை 7 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. 

 இந்த பணிப்பகிஷ்கரிப்பு காலை 11 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. இதனால் நோயாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கேகாலை – கரவனெல்ல ஆதார வைத்தியசாலையின் சிற்றூழியர்களும் தாதியர்களும் நேற்று காலை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

 கம்பளை ஆதார வைத்தியசாலையிலும் நேற்று காலை 7 மணி முதல் தாதியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நேற்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.



About UPDATE